மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், செல்போன் திருட்டு


மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், செல்போன் திருட்டு
x
தினத்தந்தி 12 Oct 2017 3:45 AM IST (Updated: 12 Oct 2017 3:32 AM IST)
t-max-icont-min-icon

சு.ஆடுதுறையில் மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், செல்போன் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள சு.ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன் (வயது 48). இவர் அதேபகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குருநாதன் கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது கடையின் கல்லாவில் இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் செல்போன் மற்றும் ரீசார்ஜ் கார்டுகளைமர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குருநாதன் மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில்

இதே போல் சு.ஆடுதுறை மெயின் ரோட்டில் உள்ள கருப்புசாமி கோவில் உள்ள விநாயகர் சன்னதியின் முன்புறம் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கோவில் பூசாரி மங்களமேடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடை மற்றும் கோவில் பூட்டை உடைத்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Tags :
Next Story