அடிப்படை வசதி கேட்டு நடுரோட்டில் நாற்று நடும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்
சேலம் கந்தம்பட்டி பகுதியில் அடிப்படை வசதி கேட்டு நடுரோட்டில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினர்.
சேலம்,
சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட்டில் இருந்து கந்தம்பட்டி பைபாஸ் செல்லும் சித்தர்கோவில் ரோட்டில் தரைப்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த 2 மாதமாக சாலை துண்டிக்கப்பட்டுள் ளது. இதனால் செவ்வாய்பேட்டையில் இருந்து கந்தம்பட்டி சென்று வரும் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியில் திரும்பி ராஜீவ்நகர், வண்டிக்காரன் நகர் பகுதியில் உள்ள சாலையை பயன்படுத்தி வருகின்றன.
கடந்த 2 மாதமாக அவ்வழியாக வாகனங்கள் போக்குவரத்து அதிகரித்து இருப்பதால், சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து விட்டன. மேலும் தற்போது பெய்து வரும் மழை காரணமாக சாலையில் குண்டும், குழியுமாக மாறியதுடன் சேறும் சகதியுமாகவும் ஆகிவிட்டன.
அப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த சாலையை சீர்செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கூறி அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு ராஜீவ்நகர், வண்டிக்காரன்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் கனகராஜ், ஜனநாயக வாலிபர் சங்க மாநகர செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் கந்தம்பட்டி செல்லும் சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள், சேறும் சகதி யுமான நடுரோட்டில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சூரமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் சூரமங்கலம் மண்டல உதவி செயற்பொறியாளர் திலகம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அங்கு வந்து சாலையில் நாற்றுநடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு மாதத்திற்குள் சாலை அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story