நாகர்கோவிலில் உள்ள நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் போராட்டம்
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் போனஸ் வழங்க வலியுறுத்தி நாகர்கோவிலில் உள்ள நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் மற்றும் 10 சதவீதம் கருணை தொகை வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் போனஸ் தொடர்பாக ரப்பர் கழக நிர்வாகம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் போனஸ் மற்றும் கருணை தொகையை உடனே வழங்க வலியுறுத்தி குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக அனைத்து தொழிற்சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள நிர்வாக இயக்குனர் அலுவலகம் முன் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில், தொ.மு.ச., சி.ஐ.டி.யு., அன்னை சோனியா ராகுல் சங்கம், ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் தங்களது பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வில்சகுமார் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், தொ.மு.ச. நிர்வாகி சுகுமாரன் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டம் தொடர்பாக சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘அரசு ரப்பர் கழகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 2016–2017–ம் ஆண்டுக்கான போனஸ் 20 சதவீதமும், 10 சதவீத கருணை தொகையும் வழங்க கேட்டு கடந்த 6–ந்தேதி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்தோம். ஆனால் போராட்டத்தை ஒத்தி வைக்கும்படி மதுரை இணை ஆணையர் கேட்டதால் வேலை நிறுத்தம் செய்யவில்லை. ஆனால் தற்போது வரை அரசு சார்பில் போனஸ் அறிவிக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். எனவே, எங்களுக்கு போனஸ் வழங்குவதற்கான உத்தரவு வரும்வரை காத்திருப்பு போராட்டத்தை கைவிடப்போவது இல்லை. நாங்கள் ஒரு நாள் பணிக்கு செல்லாததால் அரசுக்கு ரூ.50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது’ என்றனர்.
போராட்டம் தொடங்கிய பிறகு பகல் 1 மணி அளவில் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ராஜேஷ்குமார் மற்றும் மனோதங்கராஜ் ஆகியோரும் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்தனர். பின்னர் 3 பேரும், ரப்பர் கழக தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினர். அதன் பிறகு அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

Related Tags :
Next Story