திசையன்விளையில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி


திசையன்விளையில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 Oct 2017 4:30 AM IST (Updated: 13 Oct 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் அவதிப்பட்டனர். அக்டோபர் மாதம் தொடங்கி 10 நாட்களுக்கு மேல் ஆகியும் ஒரு மழை கூட பெய்யவில்லையே என்று விவசாயிகள், பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே திசையன்விளையில் வெயில் வாட்டி வதைத்தது. மதியம் 12.45 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் ஒன்று கூடின. இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 1.30 மணிவரை சுமார் 45 நிமிடங்கள் இந்த பலத்த மழை பெய்தது.

மழை காரணமாக திசையன்விளையில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மேலும் திசையன்விளை வடக்கு பஜாரில் மழைநீர் தேங்கி கிடந்தது. வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தை வளாகம் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இந்த மழையால் திசையன்விளை, உவரி, மன்னார்புரம் ஆகிய பகுதிகளில் இதமான சூழல் நிலவியது. விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல், இட்டமொழி, பரப்பாடி, விஜயநாராயணம் ஆகிய பகுதிகளிலும் நேற்று மதியம் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ½ மணிநேரம் பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story