சரக்கு சேவை வரி குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஆணையர் நிரஞ்சன் விளக்கம் அளித்தார்
நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துள்ளது. இந்த வரிமுறை குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபார பிரமுகர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
புதுச்சேரி,
நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்துள்ளது. இந்த வரிமுறை குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபார பிரமுகர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் பயன்பெறக்கூடிய வகையில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் சாராம்சங்களை விளக்கும் விழிப்புணர்வு கூட்டம் புதுவை கடற்கரை சாலையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறைஆணையர் நிரஞ்சன் கலந்துகொண்டு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் சாராம்சங்களை விளக்கினார்.
நிகழ்ச்சியில் இணை இயக்குனர் ஷியாம் சுந்தர், துணை ஆணையர் ராம்மோகன் ஆகியோர் பொதுமக்கள் மற்றும் நுகர்வோரின் சந்தேகங்களுக்கு விளக்கங்களை அளித்தனர். நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அதிகாரி நமச்சிவாயம், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.