விதிமுறைகளை மீறும் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை


விதிமுறைகளை மீறும் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Oct 2017 3:45 AM IST (Updated: 13 Oct 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

விதிமுறைகளை மீறும் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராஜாமணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடி பொருட்களை பாதுகாப்பாக கையாளுதல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்தது. கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது:-

தீபாவளிக்கு பட்டாசு கடைகள் நடத்த உரிய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. உரிய அனுமதியின்றி பட்டாசுகளை தயார் செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. அனுமதி பெறாத இடங்களில் வைத்து பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. பட்டாசு கடையானது எளிதில் தீப்பிடிக்காத பொருட்களால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் பட்டாசு கடைகள் தரை தளத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கடும் நடவடிக்கை

தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்லும்படி பட்டாசு கடைகள் அமைந்திருக்க வேண்டும். அனைத்து பட்டாசு கடைகளிலும் தேவையான அளவிற்கு மணல் வாளிகள், தண்ணீர் வாளிகள், தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மின் வயர்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். தீப்பொறியை விளைவிக்கக்கூடிய சாதனங்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் ஏதும் பட்டாசு கடைகளில் இருக்கக்கூடாது. தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு பட்டாசு பரிசுப்பொருட்கள் வழங்கும்போது உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். பட்டாசு கடைகளில் பாதுகாப்பு குறித்த அனைத்து நிபந்தனைகளும் முழுமையாக தவறாமல் பின்பற்றப்பட வேண்டும். மீறும் பட்சத்தில் விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண், மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சக்திகணேஷ் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story