பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
திருச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் 4 மணி நேரம் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி,
திருச்சி பி.எஸ்.என்.எல். முதன்மை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். காலை 11.30 மணி அளவில் தொடங்கிய இந்த போராட்டத்துக்கு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தேவராஜ், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
ஒப்பந்த தொழிலாளர் களுக்கு மாதந்தோறும் 7-ந்தேதி சம்பளம் வழங்கவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கான பணி நேரத்தை 6 மணியில் இருந்து 8 மணி நேரமாக உயர்த்த வேண்டும், 19-1-2017 முதல் 31-3-2017 மற்றும் 20-5-2009 முதல் 6-10-2010 வரையிலான நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும், ரூ. 7 ஆயிரம் போனஸ் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கோபி, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
இரவு வரை காத்திருப்பு போராட்டத்தை நடத்த போராட்ட குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அவர்கள் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தையின்போது அதிகாரிகள் அளித்த உறுதியை தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு அவர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story