புதிய பயிர் கடன் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன் நடத்தினர்


புதிய பயிர் கடன் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன் நடத்தினர்
x
தினத்தந்தி 13 Oct 2017 4:30 AM IST (Updated: 13 Oct 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

புதிய பயிர் கடன் வழங்க கோரி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு அமைக்கவேண்டும், பயிர் காப்பீடு திட்டம், பொது காப்பீடு திட்டத்தை பொது துறை நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடனை தள்ளுபடி செய்யவேண்டும், புதிய பயிர் கடன் வழங்கவேண்டும், எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும், கால்வாய், ஏரி குளங்களை தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.4 ஊக்க தொகை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகள், தொழிலாளர்கள்

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் அயிலை சிவசூரியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுரேஷ், புறநகர் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் உள்பட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story