பெருவிளை தெய்விமுருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா 20–ந் தேதி தொடங்குகிறது
பெருவிளை தெய்விமுருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 20–ந் தேதி தொடங்குகிறது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே பெருவிளையில் தெய்விமுருகன் கோவில் உள்ளது. இங்கு கந்தசஷ்டி திருவிழா வருகிற 20–ந் தேதி தொடங்கி 26–ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாளில் அதிகாலையில் கணபதிஹோமம், காலை 6.40 மணிக்கு காப்புகட்டுதல், முருகனுக்கு பால முருகன் அலங்காரம், இரவு 7 மணிக்கு சுமங்கலி பூஜை தொடர்ந்து கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.
21–ந் தேதி முருகனுக்கு சுப்பிரமணியன் அலங்காரமும், 22–ந் தேதி சாமிக்கு வேடன் அலங்காரமும், இரவு 7 மணிக்கு வண்ண கோலப்போட்டியும் நடக்கிறது.
23–ந் தேதி முருகனுக்கு ஆறுமுகன் அலங்காரம் செய்யப்பட்டு, இரவு கலை நிகழ்ச்சி நடக்கிறது. 24–ந் தேதி சாமிக்கு போர்கோல முருகன் அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 8 மணிக்கு மகளிர் மாநாடும் நடக்கிறது.
சூர சம்ஹாரம்
25–ந் தேதி கந்த சஷ்டி விழா நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு பெருவிளை சொக்கநாதர் கோவிலில் இருந்து ஆதிபராசக்தியிடம் இருந்து சக்திவேல் வாங்கி வருதல், 1 மணிக்கு தெய்வி முருகன் சூரசம்ஹாரத்திற்கு புறப்படுதல் ஆகியவை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சூர சம்ஹாரம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சிலம்பு போட்டி நடக்கிறது.
26–ந் தேதி திருக்கல்யாண விழாவும், மதியம் அன்னதானமும், இரவு சமய மாநாடும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பெருவிளை தெய்விமுருகன் பக்தர்கள் சங்க கவுரவ தலைவர் மாசானமுத்து, தலைவர் வெற்றிவேலன், சட்டஆலோசகர் செல்வகுமார், அருள்குமரன், செயலாளர் ராஜபூபதி, பொருளாளர் சிவராஜ் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story