பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விபத்து காப்பீடு திட்டம் விரைவில் தொடக்கம் அமைச்சர் தகவல்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விபத்து காப்பீடு திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
திருச்சி,
தமிழகத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் ‘நீட்’ தேர்வு உள்ளிட்ட பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள தமிழகத்தில் 412 பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் ரூ.486 கோடி செலவில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கணினி முறையில் பாடம் கற்றுத்தரப்பட உள்ளது.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி வரும் டிசம்பர் மாதம் தொடங்கி 2 மாதத்தில் முடியும். இந்த ஸ்மார்ட் கார்டில் மாணவனின் முகவரி, ஆதார் அட்டை விவரங்கள் உள்பட அனைத்தும் இடம் பெற்று இருக்கும். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஸ்மார்ட் கார்டுடன் இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விபத்து காப்பீடு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த உள்ளோம். இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி உள்ளேன்.
இந்த திட்டத்தை விரைவில் அவர் தொடங்கி வைப்பார். ‘நீட்’ தேர்வை பொறுத்தவரையில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் உச்சநீதிமன்றம் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்ததால் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் அவர்களின் கல்வித்தரம் நீட் தேர்வுக்கு தகுந்தாற்போல் உயர்த்தப்படும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கும் எந்த கருத்துவேறுபாடும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story