திருமண மண்டபம் கட்டும் இடத்தை பார்வையிட வந்த மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு


திருமண மண்டபம் கட்டும் இடத்தை பார்வையிட வந்த மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Oct 2017 4:30 AM IST (Updated: 15 Oct 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

திருமண மண்டபம் கட்டும் இடத்தை பார்வையிட வந்த மாநகராட்சி அதிகாரிகளை கிறிஸ்தவர்கள்- அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

திருச்சி,

திருச்சி கருமண்டபத்தில் குணமளிக்கும் மாதா ஆலயத்தின் அருகே உள்ள காலி இடத்தில் மற்றொரு நிர்வாகத்தினர் சார்பில் திருமண மண்டபம் கட்டுவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆலயம் அருகே திருமண மண்டபம் கட்டினால் ஆலயத்தின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும், பொதுமக்கள் அமைதி கெடும் என்றும் அருகே உள்ள பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதற்கும் இடைஞ்சல் ஏற்படும் என்பதால் திருமண மண்டபத்தை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று குணமளிக்கும் மாதா ஆலயத்தை சேர்ந்த பங்கு மக்கள் ஏற்கனவே அறவழி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை அந்த திருமண மண்டபம் கட்டும் இடத்தை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்த வந்தனர். அப்போது குணமளிக்கும் மாதா ஆலயத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களும், பல்வேறு கட்சியினரும் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், திருமண மண்டபம் கட்டுவது தொடர்பாக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் பார்வையிட வந்ததை கண்டித்து கோஷங் களை எழுப்பியதுடன், திருமண மண்டபம் கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story