பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி


பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 15 Oct 2017 4:15 AM IST (Updated: 15 Oct 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் பலி கேரளாவை சேர்ந்தவர்

கொடைரோடு,

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகன் அமித் (வயது 25). இவருடைய நண்பர் ஜெரி (25). இவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் பெங்களூருவில் இருந்து மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி புறப்பட்டனர். நேற்று காலை திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள மெட்டூர் மேம்பாலத்தை அவர்கள் கடக்க முயன்றனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அமித் பரிதாபமாக இறந்தார். ஜெரி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த அம்மையநாயக்கனூர் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story