அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்


அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Oct 2017 4:00 AM IST (Updated: 15 Oct 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபநாசம்,

பாபநாசம் ஒன்றிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பாபநாசம் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் விஜயாள் தலைமை தாங்கினார். பாபநாசம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் காதர்உசேன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பாபநாசம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் ஈடுபட வேண்டும்.

காலிப்பணியிடங்கள்

மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், மருத்துவ மனையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சதாசிவம், இளங்கோவன், சேக்அலாவுதீன், கணேசன், சங்கர், கஸ்தூரிபாய், மாலதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story