திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 15 Oct 2017 11:00 PM GMT (Updated: 15 Oct 2017 9:51 PM GMT)

திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடிகள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி,

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த உலகநாதன் மகன் முரளி. சம்பவத்தன்று இவர், அரியமங்கலம் நேருஜி நகர் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரியமங்கலம் மலையப்பநகர் காந்தி தெருவை சேர்ந்த ராஜ்(வயது33), கீழ அம்பிகாபுரம் ரெயில் நகரை சேர்ந்த நெப்போலியன்(40) ஆகிய இருவரும் சேர்ந்து முரளியின் கழுத்தில் அரிவாளை வைத்து ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டினர். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜ், நெப்போலியன் ஆகியோர் ரூ.5 ஆயிரத்தை முரளியிடமிருந்து பறித்து சென்றனர். இது தொடர்பாக முரளி அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ், நெப்போலியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பிரபல ரவுடிகளான இவர்கள் 2 பேர் மீதும் போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ராஜ் மீது அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகளும், திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளன.

நெப்போலியன் மீது அரியமங்கலத்தில் 19 வழக்குகளும், கே.கே.நகர், காந்தி மார்க்கெட், பொன்மலை ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், கோட்டை, திருவெறும்பூர் போலீஸ் நிலையங்களில் தலா 2 வழக்குகளும் உள்ளன.

எனவே ராஜ், நெப்போலியன் ஆகியோரின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் போலீசார் கொடுத்த அறிக்கையை பரிசீலனை செய்த திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண், ராஜ் மற்றும் நெப்போலியன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சி மத்திய சிறையில் இருந்த ராஜ், நெப்போலியன் ஆகியோரிடம் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டதற்கான ஆணையின் நகலை போலீசார் கொடுத்தனர். 

Related Tags :
Next Story