ஊட்டி மலைரெயில் பாதையில் பாறை உருண்டு விழுந்தது சுற்றுலா பயணிகள் அவதி
ஊட்டி மலை ரெயில் பாதையில் பாறை உருண்டு விழுந்தது. இதனால் ரெயில் 2½ மணி நேரம் தாமதமாக மேட்டுப்பாளையம் வந்ததால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து இயற்கை அழகு காட்சிகளை ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 7.10 மணிக்கு வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து மதியம் 12 மணியளவில் மலைரெயில் ஊட்டியை சென்றடைந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் பாதையில் ஹில்குரோவ்- அடர்லி ரெயில் நிலையங்கள் இடையே பெரிய பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்தது.
இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஊட்டியில் இருந்து மதியம் 2 மணிக்கு மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்ட மலைரெயில், ஹில்குரோவ் ரெயில் நிலையம் அருகில் 4.45 மணிக்கு வந்தது. தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் அங்கேயே ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த பகுதி வனவிலங்குகள் நடமாட்டம் மிக்க பகுதி என்பதால், சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் மலைரெயிலில் அமர்ந்திருந்தனர்.
தொடர்ந்து மலைரெயில் இருப்புப்பாதை பொறியாளர்கள் ஜெயராஜ், வெள்ளிங்கிரி ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் மலைரெயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பாறையை சம்மட்டி மூலம் சிறிய கற்களாக உடைத்து அப்புறப்படுத்தினர். இந்த பணி 2 மணி நேரம் நீடித்தது.
இதையடுத்து மாலை 6.45 மணிக்கு மலைரெயில் மேட்டுப்பாளையத்துக்கு புறப்பட்டு சென்றது. வழக்கமாக மாலை 5.25 மணிக்கு மேட்டுப்பாளையம் வர வேண்டிய மலை ரெயில் பாறை உருண்டு விழுந்த சம்பவம் காரணமாக 2½ மணி நேரம் தாமதமாக இரவு 7.55 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். அதன்பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் புளுமவுண்டன் எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு சென்றது.

Related Tags :
Next Story