நெல்லை அருகே நாற்கர சாலையில் ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து கவிழ்ந்தன; 25 பயணிகள் படுகாயம்
நெல்லை அருகே நாற்கர சாலையில் 2 ஆம்னி பஸ்கள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. இதில் 25 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கயத்தாறு,
சென்னையில் இருந்து பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் நெல்லைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 4.50 மணி அளவில் அந்த பஸ், நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் நாற்கர சாலையில் வந்தது.
அப்போது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடந்தது. ஆம்னி பஸ், திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்து நடந்த சிறிது நேரத்துக்குள் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்த இன்னொரு தனியார் ஆம்னி பஸ்சும் அதே இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்து 2 ஆம்னி பஸ்கள் ஒரே இடத்தில் கவிழ்ந்ததால் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. 2 பஸ்களிலும் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி அபயக்குரல் எழுப்பினர்.
தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நெல்லையில் இருந்து தீயணைப்பு படைவீரர்களும், தேசிய நெடுஞ்சாலை மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்தில் சிக்கிய பஸ்களின் பின்பக்க கண்ணாடிகளை உடைத்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.
முதலில் கவிழ்ந்த பஸ்சில் இருந்த 20 பயணிகளும், 2-வது பஸ்சில் இருந்த 5 பயணிகளும் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். முதல் பஸ்சில் வந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜஜித் (வயது 27) என்பவர் பஸ்சுக்கு அடியில் சிக்கிக்கொண்டதால் அவரை மீட்பத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டது. அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அடுத்தடுத்து 2 ஆம்னி பஸ்கள் நாற்கர சாலையில் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story