விமான நிறுவனத்தில் டிரைவர் வேலை


விமான நிறுவனத்தில் டிரைவர் வேலை
x
தினத்தந்தி 16 Oct 2017 6:38 AM GMT (Updated: 16 Oct 2017 6:38 AM GMT)

ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்விசஸ் லிமிடெட் (ஏ.ஐ.இ.எஸ்.எல்.). நிறுவனத்தில் டிரைவர் மற்றும் யூடிலிட்டி ஹேண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

ந்திய பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்விசஸ் லிமிடெட் (ஏ.ஐ.இ.எஸ்.எல்.). தற்போது இந்த நிறுவனத்தில் டிரைவர் மற்றும் யூடிலிட்டி ஹேண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 75 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

31-8-2017 அன்று 55 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், கனரக மற்றும் இலகு ரக வாகன லைசென்சு பெற்றவராகவும் இருக்க வேண்டும். 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்து விமானத்துறை சம்பந்தமான பணியில் 5 ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் யூடிலிட்டி ஹேண்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

திறமைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணத்திற்கு டி.டி. எடுத்து, விண்ணப்ப படிவத்தை நிரப்பி எடுத்துச் சென்று நேர் காணலில் பங்கேற்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். 30-10-2017-ந் தேதி இதற்கான நேர்காணல் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. 

Next Story