முப்பரிமாண செல்பி காட்சித்திரை


முப்பரிமாண செல்பி காட்சித்திரை
x
தினத்தந்தி 16 Oct 2017 7:52 AM GMT (Updated: 16 Oct 2017 7:52 AM GMT)

செல்பி படங்களை சிற்பமாக்கும் ‘செல்பி 3டி டிஸ்பிளே’ தொழில்நுட்பம்.

பொது இடங்களில் தலைவர்கள் சிலைபோல, உங்கள் அழகிய செல்பி படங்களை சிற்பமாக காட்சிக்கு வைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றித் தருகிறது இந்த ‘செல்பி 3டி டிஸ்பிளே’ தொழில்நுட்பம். மேத்யூ மோர் ஸ்டூடியோ என்ற நிறுவனம், 14 அடி உயரத்தில், பல அடுக்கு எல்.இ.டி. திரைகளை இணைத்து முப்பரிமாண காட்சித்திரையை உருவாக்கி இருக்கிறது. இது நமது செல்பி படங்களை, சிற்பம்போல முப்பரிமாண (3டி) வடிவில் காட்சிக்கு வைக்கும். வலைத்தளங்களில் செல்பிகளை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் செல்பி பிரியர்களுக்கு, இது புதுமையான இன்பத்தைத் தரும். இன்னும் சிறிது காலத்திலேயே இந்த தொழில்நுட்பத்தின் உதவியால், பொது இடங்கள், அருங்காட்சியகங்கள், பொழுதுபோக்குக் பூங்காக்களில் நமது முகங்களை சிறிது நேரத்திற்கு பிரமாண்ட சிற்பமாக காட்சிக்கு வைத்து காசு பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. உங்களுக்கு வசதியிருந்தால், வீட்டின் மொட்டை மாடியில் கூட, இந்த கருவியை நிறுவி, அவ்வப்போது நீங்கள் எடுக்கும் செல்பிகளை, சிற்பங்களாக மிளிர வைத்து சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்! 

Next Story