நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு


நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2017 8:30 PM GMT (Updated: 16 Oct 2017 3:33 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாளை மறுநாள்

தூத்துக்குடி அருகே உள்ள கொம்புக்காரநத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

இதனால் வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி.தளவாய்புரம், கொம்புக்காரநத்தம், செட்டியூரணி, கல்லன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலதட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, கேம்ப் தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் மெட்டில்பட்டி, அழகாபுரி, வெம்பூர், சென்னமரெட்டிபட்டி ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை தூத்துக்குடி ஊரக மின்சாரவாரிய செயற்பொறியாளர் கமலா தெரிவித்து உள்ளார்.

21–ந் தேதி

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21–ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின்நகர் பகுதி, கேம்ப்–1, கேம்ப்–2, தோப்புத்தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம், துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை முத்தையாபுரம் துணை மின்நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார்.

Next Story