நாகர்கோவிலில் மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2017 10:45 PM GMT (Updated: 16 Oct 2017 7:00 PM GMT)

நாகர்கோவிலில் மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,

ரேசன் பொருட்கள் வினியோகம் தொடரவேண்டும், ஊட்டச்சத்து உணவுபொருட்களை மானிய விலையில் வழங்கவேண்டும், அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.வரியை நீக்கவேண்டும், கியாஸ் சிலிண்டர் மானியம் தொடரவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் இயக்கங்களின் கூட்டுக்குழுவினர் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டுக்குழு தலைவர் மேரி தலைமைதாங்கி பேசினார். உறுப்பினர்கள் சாந்தி, அமிர்தபாய் உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கிபேசினர். முடிவில், செயலாளர் ஆக்னஸ் குளோரி நன்றி கூறினார்.

Next Story