ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபரை மீட்டுத்தாருங்கள் கலெக்டரிடம் பெற்றோர் கோரிக்கை


ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபரை மீட்டுத்தாருங்கள் கலெக்டரிடம் பெற்றோர் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Oct 2017 4:15 AM IST (Updated: 17 Oct 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட வாலிபரை மீட்டுத்தாருங்கள் என்று தஞ்சை கலெக்டரிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த கோவிலூர் அருகே உள்ள புலவர்நத்தம் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுடைய மகன் சத்தியமூர்த்தி (வயது19). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள வடவாற்றில் குளிக்க சென்ற போது ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு வந்து சத்தியமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாகவும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் சத்தியமூர்த்தி என்ன ஆனார்? என தெரிய வில்லை.

கலெக்டரிடம் மனு

இந்த நிலையில் சத்தியமூர்த்தியின் பெற்றோர் 25-க்கும் மேற்பட்ட உறவினர்களுடன் வந்து தஞ்சை கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்களது மகன் சத்தியமூர்த்தி, தனது நண்பர்களுடன் வடவாற்றில் குளிக்க சென்றான். அப்போது ஆற்றில் நீர் அதிகமாக சென்றதால் சத்தியமூர்த்தி தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதாக அவனுடைய நண்பர்கள் தெரிவித்தனர். எனது மகனை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் தேடியும் கிடைக்கவில்லை. எனவே கலெக்டர் எனது மகனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர். 

Related Tags :
Next Story