தீபாவளியையொட்டி, திருட்டை தடுக்க ரோந்து பணிக்கு கூடுதல் போலீசார் நியமனம்
தீபாவளியையொட்டி, திருட்டை தடுக்க ரோந்து பணிக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீபாவளி விற்பனை களை கட்டி உள்ளது. ஜவுளி கடைகள் அனைத்திலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதுபோக, மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடைவீதிகளில் திடீர் கடைகள் முளைத்துள்ளன. திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள தற்காலிக கடைகளில் துணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதையொட்டி, திருட்டு சம்பவங்கள் அரங்கேறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ஒலி பெருக்கி மூலம் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. மாறுவேடத்திலும் போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியை மேற்கொள்கிறார்கள். இதுபோக கூடுதல் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீபாவளியையொட்டி திருட்டு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடை வீதிகள் மட்டுமின்றி மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலைகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் கூடுதலாக 26 மோட்டார் சைக்கிள் ரோந்து போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதே போல, நடந்துகொண்டே ரோந்து பணியில் ஈடுபட 36 போலீசார் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட பகுதியை நடந்து கொண்டே கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story