திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 18 Oct 2017 4:15 AM IST (Updated: 18 Oct 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் பிரகாஷ். விவசாயி. இவர் திருவள்ளூர் ஜெ.என். சாலையில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் எடுத்தார்.

திருவள்ளூர்,

பின்னர் பணத்தை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார். வீட் டுக்கு திரும்பி வந்த போது ஆயில்மில் பகுதியில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை வங்கியின் முன்பு நிறுத்தி இருந்தார்.

திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.1 லட்சத்தை காணவில்லை. மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

பிரகாஷ் வங்கியில் பணம் எடுத்தபோதே பின்தொடர்ந்து கொள்ளையர்கள் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story