ரூ.2 கோடி செம்மரக்கட்டைகள், டிப்பர் லாரி பறிமுதல் தப்பிஓடிய 50 பேருக்கு போலீசார் வலைவீச்சு
திருப்பதி கரகம்பாடி வனப்பகுதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள், லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தப்பிஓடிய 50 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருப்பதி,
திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, வனத்துறை அதிகாரி நாகராஜ் ஆகியோர் தலைமையில் போலீசாரும், வனத்துறையினரும் திருப்பதி கரகம்பாடி வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கரகம்பாடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு அருகே சேஷாசலம் வனப்பகுதியை ஒட்டி ஒரு டிப்பர் லாரி நிறுத்தப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு சென்று பார்த்தபோது, அதன் அருகே 50 பேர் கொண்ட கும்பல் நின்றிருந்தனர். அந்தக் கும்பல், போலீசாரை பார்த்ததும் கற்களை எடுத்து வீசி தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து டிப்பர் லாரியை சோதனைச் செய்து பார்த்தபோது, அதில் ஏராளமான செம்மரக்கட்டைகள் ஏற்றப்பட்டு, கடத்துவதற்கு தயார் நிலையில் இருந்தது தெரிய வந்தது. டிப்பர் லாரியோடு, செம்மரக்கட்டைகள், மது பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் வலைவீச்சு
இதுகுறித்து செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரி ரவிச்சந்திரன் கூறுகையில், திருப்பதி கரகம்பாடி பகுதியில் அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, ஒரு டிப்பர் லாரியில் ஏற்றப்பட்டு இருந்த செம்மரக்கட்டைகள், அங்குள்ள கால்வாயில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த செம்மரக்கட்டைகள் என மொத்தம் 61 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இதேபகுதியில், இதுவரை ரூ.6 கோடி மதிப்பிலான 200 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன, என்றார்.
இதையடுத்து அதிரடிப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு ஹரிநாத்பாபு தலைமையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, கரகம்பாடி வனப்பகுதியில் இருந்து தப்பி ஓடிய செம்மரக்கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். மேலும் கரகம்பாடி, திருப்பதியில் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Tags :
Next Story