டெங்கு கொசு ஒழிப்பு பணி டீக்கடையை சுத்தமாக பராமரிக்காத உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் டீக்கடையை சுத்தமாக பராமரிக்காத உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
கும்பகோணம்,
கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் கேன்களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் புழுக்கள் உள்ளதா? என ஆய்வு செய்தார். அதில் ஒரு டீக்கடைக்குள் சென்று அங்குள்ள கேனில் இருந்த தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் புழு இருப்பதை கண்டுபிடித்தார். இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மூலம் அந்த கேனில் இருந்த தண்ணீர் கீழே கொட்ட உத்தரவிட்டார். மேலும் கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். தொடர்ந்து நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தொட்டிகளில் ஆய்வு செய்தார். அப்போது திறந்தநிலையில் இருந்த குடிநீர் தொட்டிகளை மூடி வைக்கும்படியும், தினமும் காலை, மாலை நேரங்களில் பஸ் நிலையத்தில் துப்புரவு பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். பின்னர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள குப்பைகள், கழிவு நீரை அகற்ற உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அலுவலகத்தின் பின்புறம்பழைய பொருட்களை வைத்திருந்ததால் சங்கத்துக்கு ரூ.500 அபராதம் விதித்தார். கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு நினைவு பூங்கா பாலக்கரையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் பராமரிப்பு இல்லாமல் இருப்பதை பார்த்து அங்குள்ள செயற்கை நீருற்றை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டார்.
பின்னர் கலெக்டர் அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் 600 பேர் காய்ச்சலால் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதில் சுமார் 40 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறிப்பட்டது. அவர்களுக்கு டெங்கு சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணியில் அனைத்துத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணத்தில் செய்யப்பட்ட ஆய்வில் ஒரு டீக்கடையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் டெங்கு கொசு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், நகராட்சி ஆணையர் கே.உமாமகேஷ்வரி, நகர் நல அலுவலர் பிரேமா, தாசில்தார் மாணிக்கராஜ் ஆகியோர் இருந்தனர்.

Related Tags :
Next Story