போலீஸ்காரர் மனைவி மர்ம சாவு: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்


போலீஸ்காரர் மனைவி மர்ம சாவு: சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2017 4:45 AM IST (Updated: 18 Oct 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

தீவட்டிப்பட்டி அருகே போலீஸ்காரர் மனைவி மர்மமாக இறந்தது தொடர்பாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

சேலம்,

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சங்கர். இவர் சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஆனந்தி (வயது 22). நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை எடுத்து தருவதற்கு பெற்றோர் இல்லை என்ற ஏக்கத்தில் ஆனந்தி உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, விஷம் குடித்து விட்டு மயங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியிரில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனிடையே ஆனந்தியின் அக்காள் வாசுகி, தனது தங்கை சாவில் மர்மம் இருப்பதாக தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆனந்தி மர்மமாக இறந்தது தொடர்பாக மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டியும் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று ஆனந்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த ஆனந்தியின் உறவினர்கள் திடீரென, அவரது சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதைகேட்ட அங்கிருந்த போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த ஆனந்தியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story