ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன: அரசுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள இடம் மீட்பு
திருச்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. இதன்மூலம் ரூ.10 கோடி மதிப்புள்ள இடம் மீட்கப்பட்டது.
திருச்சி,
திருச்சி தென்னூர் விநாயகபுரம் பகுதியில் தமிழக அரசின் வருவாய்த்துறைக்கு சொந்தமான களம்புறம்போக்கு இடத்தில் சிலர் வீடு கட்டி வாடகைக்கு விட்டு இருந்தனர். சுமார் 30 ஆண்டுகளாக இந்த இடத்தை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்து இருந்ததன் காரணமாக தில்லைநகர் போலீஸ் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. அந்த இடத்தில் 11 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. அவற்றில் குடியிருந்தவர்கள் அந்த இடத்திற்கு உரிமை கொண்டாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வீடுகளை இடித்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். நேற்று காலை திருச்சி மேற்கு தாசில்தார் பாத்திமா சகாயராஜ் தலைமையில் திருச்சி கிழக்கு தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அதிகாரி ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு சென்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஸ்ரீரங்கம் சரக உதவி போலீஸ் கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில் போலீஸ் படையினரும் சென்று இருந்தனர்.
அதிகாரிகள் வருவதை அறிந்ததும் அந்த வீடுகளில் வசித்தவர்கள் வெளியேற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வைத்தனர். வயதான மூதாட்டி ஒருவரையும் வெளியே தூக்கி வந்தனர். அதன் பின்னர் பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அந்த வீடுகள் இடித்து தரை மட்டம் ஆக்கப்பட்டன. இதன்மூலம் அரசுக்கு சொந்தமான 20 சென்ட் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.10 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட போது அவற்றில் வசித்த சிலர் தென்னூர் மெயின்ரோட்டுக்கு வந்து சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தில்லைநகர் போலீசார், 22 பேரை கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து இருந்தனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story