பட்டாசு தீப்பொறி விழுந்ததில் குப்பை கிடங்கில் தீ விபத்து பொதுமக்கள், கால்நடைகள் பாதிப்பு
பட்டாசு தீப்பொறி விழுந்ததில் தாராபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று தீ பிடித்து எரிந்தது. இதனால் எழுந்த புகை மண்டலத்தால் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
அலங்கியம்,
தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு நல்லம்மை நகரில் உள்ளது. இங்கு தான் தாராபுரம் நகராட்சி பகுதி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் அங்கு குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள் யாரோ வைத்து ராக்கெட் பட்டாசு தீப்பொறி விழுந்ததில் நகராட்சி குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர். ஆனால் வெகுநேரம் வரை தீயணைப்பு வாகனம் அங்கு வரவில்லை. இதனால் தீ மளமளவென பரவியது. பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் இருந்ததால் அப்பகுதியில் புகை மண்டலம் ஏற்பட் டது. அந்த பகுதி வழியாக ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகள் எதிரே வந்த வாகனங்கள் கண்ணுக்கு தெரியாததால் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
அதன் அருகில் நஞ்சியம்பாளையம், குப்புச்சிபாளையம், படுகை, தாளக்கரை உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் அங்கு பள்ளிகள், கல்லூரிகள் உள்ளதால் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
அப்பகுதி முழுவதும் புகை பரவியதால் அருகில் உள்ள கிராம மக்கள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகினர். அதுபோன்று அருகில் உள்ள விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். கால்நடைகள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டன.
மர்ம ஆசாமிகள் அணைக்காமல் வீசிச்செல்லும் பீடி, சிகரெட்டாலும் இதுபோன்று அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகள் ஏற்பட்டு குப்பைகளால் அப்பகுதியில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும். அல்லது தீ விபத்து ஏற்படாமல் பார்த்துக் கொள்வதோடு, குப்பை கிடங்கை விட்டு புகை வெளியே வராத வண்ணம் பாதுகாப்பு சுவர்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Tags :
Next Story