கழிவுநீர் வடிகால் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
விருத்தாசலத்தில் கழிவுநீர் வடிகால் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பூதாமூர் 17-வது வார்டு பகுதியில் உள்ள சி.என்.சி. நகரில் கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை. மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதனை வெளியேற்ற வடிகால் வசதியும் செய்து தரவில்லை.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று கால்வாய் நிரம்பி வழிந்து தெருவில் கழிவுநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலம்- சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், கழிவுநீர் கால்வாய்க்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீசார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையேற்ற பொதுமக்கள், நகராட்சி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 23-ந் தேதி (திங்கட்கிழமை) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story