நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கட்டையால் தாக்கி மனைவி படுகொலை
சேலத்தில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கன்னங்குறிச்சி,
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி சத்யநகரை சேர்ந்தவர் பூராஜ் (வயது 39). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயா என்கிற ஜெயலட்சுமி (35). இவர், கிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆயா வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு யோக மணிகண்டன்(17), பொன் மாணிக்கவேல்(15) என்ற இரண்டு மகன்களும், காமாட்சி(10) என்ற ஒரு மகளும் உள்ளனர். ஜெயாவின் நடத்தையில் கணவர் பூராஜூக்கு சந்தேகம் இருந்தது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் தீபாவளியன்று பூராஜ், கடையில் கறி வாங்கி வந்து வீட்டில் கொடுத்துள்ளார். அதை ஜெயா சமைத்துள்ளார். பின்னர், மதியம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவர், மனைவியிடம் சாப்பாடு வைக்குமாறு கூறினார். அதற்கு அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
அந்த சமயத்தில் மகன்கள் இருவரும் பட்டாசு வெடிக்க நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் இருந்த மகள் காமாட்சியை கடைக்கு சென்றுவருமாறு பூராஜ் கூறி அவரை அனுப்பிவிட்டார். அப்போது, தீபாவளிக்கு அதிகளவில் பணம் வைத்து செலவு செய்கிறாயே? என்று மனைவியிடம் கேட்டுள்ளார். இதற்கு பதில் கூற அவர் மறுத்ததால் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கட்டிட வேலைக்கு பயன்படுத்தப்படும் கட்டை மற்றும் பலகையால் மனைவி ஜெயாவை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு தலை, கை, முகம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
வீட்டிற்குள் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அலறினார். இருப்பினும், கொலை வெறி அடங்காத பூராஜ், கட்டையால் மனைவியின் கால்கள் மீது ஓங்கி அடித்தார். இதில் ஜெயாவின் 2 கால்களும் முறிந்தது. பின்னர், அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த ஜெயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, ஜெயாவின் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், மதுபோதையில் இருந்தபோது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டதாகவும் போலீசாரிடம் கட்டிட தொழிலாளி பூராஜ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story