டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான வணிக நிறுவனங்களுக்கு ரூ.38,500 அபராதம்
டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக அமைந்த வணிக நிறுவனங்களிடம் ரூ.38,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மெத்தனமாக செயல்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தில் களப்பணியாளர்கள் மேற்கொண்ட டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் தடுப்புப்பணிகளை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயில் டிரம்கள், அட்டை பெட்டி ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை பார்வையிட்டார்.
மேலும் ரெயில் நிலைய நடைபாதை கடைகளில் உள்ள குளிர் சாதன பெட்டிகள், ரெயில்வே போலீஸ் நிலையத்தில் உள்ள தண்ணீர் குடங்கள், பயணிகள் காத்திருப்பு அறை மற்றும் நடைபாதையில் உள்ள பொதுமக்கள் கைகழுவும் இடம் போன்ற இடங்களில், தண்ணீர் தேங்கியுள்ளதா? என்பதை பார்வையிட்டு, தண்ணீர் தேங்கியுள்ள பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது நாகர்கோவில் நகராட்சி நகர்நல அதிகாரி வினோத்ராஜா, ரெயில் நிலைய உயர் அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது:-
உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து, டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்திடவும், டெங்கு கொசுவினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவகையில் தங்களது பணிகளை தாமாக முன்நின்று மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் வீட்டு உரிமையாளர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் டெங்கு கொசு உற்பத்தியாவதற்கு காரணமாகும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நாகர்கோவில் நகராட்சி பகுதியில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக அமைந்த ஒரு பெரிய வணிக நிறுவனத்திடம் ரூ.30 ஆயிரமும் இதர சிறு வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.8,500-ம் ஆகமொத்தம் ரூ.38,500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
டெங்கு தடுப்பு பணிகளில்் தனிக்கவனம் செலுத்தாமலும், முறையாக டெங்கு தடுப்பு பணிகளை கண்காணிக்காமலும் மெத்தனமாக செயல்பட்ட காரணத்திற்காக தெங்கம்புதுர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பத்மனாபபுரம் நகராட்சி சுகாதார அலுவலர் ஆகியோர் மீது துறை வாரியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த்துறையில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் தலைமையில் மாவட்டத்திலுள்ள அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றியதின் காரணமாகவும், பொதுமக்களின் ஒத்துழைப்பின் காரணமாகவும் தற்பொழுது டெங்கு காய்ச்சல் குமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது. அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பினை வழங்கி குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு உதவிட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

Related Tags :
Next Story