ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி ஜெ.தீபா பேட்டி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஜெ.தீபா கூறினார்.
திருச்சி,
எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்து பணியாற்றுவேன் என்று நான் எப்போதும் சொல்லவில்லை. அதே சமயம் தொண்டர்களும், மக்களும் என்ன விரும்புகிறார்களோ அதன்படி செயல்படுவேன் என்று தான் கூறினேன். என்னுடைய கட்சி கலைக்கப்பட்டு விட்டதாகவும், செயல்பாடுகள் முடங்கி விட்டதாகவும் கூறுவது தவறு. எனது செயல்பாடுகள் முடங்கவில்லை. தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சினையில் தேர்தல் ஆணையத்தில் விவாதம் நடந்து வருகிறது. இரு அணிகளுமே ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். நாங்களும் பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்து இருந்தபோதிலும், அந்த அணிகளின் பெயர்களை மட்டுமே குறிப்பிடுகிறார்கள். விவாதத்திற்கு பின்னரே இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பது தெரியவரும். இருந்தாலும் கட்சி, சின்னம் ஆகியவை யாருக்கு என்பதை தொண்டர்களே முடிவு செய்வார்கள்.
பல்வேறு காரணங்களால் தள்ளி போடப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் நான் போட்டியிட்டு, மக்கள் ஆதரவோடு வெற்றி பெறுவேன்.
ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை தொடருவேன். டெங்கு காய்ச்சல் போன்ற பிரச்சினைகளால் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு அதைப்பற்றி கவலைப்படாமல், பல கோடி ரூபாயை செலவிட்டு யாரை முன்னிலைப்படுத்துவது என தெரியாமல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகிறது.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணிகள் கட்டாயத்தின் பேரில் இணைந்து உள்ளனர். இதன் பின்னணியில் மத்திய அரசும், தமிழகத்தில் சிலரும் உள்ளனர். ஆனால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இடையே சரியான புரிதல் இல்லை.
டி.டி.வி.தினகரன் மக்கள் பிரச்சினையை பற்றி கவலைப்படவில்லை. அவர் இந்த ஆட்சியை கலைப்பதிலேயே குறியாக இருக்கிறார். அ.தி.மு.க.வில் பிளவுபட்ட அணிகள் இணையவேண்டும் என்று கூறிவரும் தம்பிதுரை, முதலில் தான் எந்த அணியில் உள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனது கணவர் மாதவனுடன் வந்திருந்த தீபா, நேற்று காலை திருச்சி உறையூர் வெக்காளியம்மன், குணசீலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், முசிறி அங்காளம்மன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

Related Tags :
Next Story