குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
தொட்டியம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொட்டியம்,
தொட்டியம் அருகே உள்ள கிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு கிடாரம்- காட்டுப்புத்தூர் சாலையில் சூரம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் (ஊராட்சிகள்) ரேவதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக கிடாரம்- காட்டுப்புத்தூர் சாலையில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story