காவிரி பிரச்சினைக்கு நதிநீர் இணைப்பு திட்டம் மட்டுமே நிரந்தர தீர்வு இல.கணேசன் எம்.பி பேட்டி


காவிரி பிரச்சினைக்கு நதிநீர் இணைப்பு திட்டம் மட்டுமே நிரந்தர தீர்வு இல.கணேசன் எம்.பி பேட்டி
x
தினத்தந்தி 21 Oct 2017 4:30 AM IST (Updated: 21 Oct 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

நதிநீர் இணைப்பு திட்டத்தால் மட்டுமே காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று தஞ்சையில் இல.கணேசன் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய வந்த பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி., பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு என்பது சட்டப்படிதான் நிகழவேண்டும். ஆனால் இதற்கு மற்றொரு நிரந்தர தீர்வு உள்ளது. அது வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட நதிநீர் இணைப்பு திட்டம்.

இந்த திட்டத்தின்படி, மகாநதி-கோதாவரி நதி இணைப்பு திட்டம் முடிந்துவிட்டது. அதேபோல, கோதாவரி-கிருஷ்ணா நதி இணைப்பு திட்டமும் முடிந்துவிட்டது. ஆனால் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் மட்டும் எஞ்சியுள்ளது. இந்த திட்டம் விரைவுபடுத்தப்பட்டால் காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே இந்திய பாரம்பரியமான மருத்துவ முறைகளான இவை பாதுகாக்கப்படவேண்டும். இந்த மருத்துவத்திற்கு அரசாங்கமும் முழு அங்கீகாரம் அளிக்கவேண்டும்.

தற்போது பிரதமர் நரேந்திரமோடி ஆட்சியில் ஆயுர்வேதத்திற்கென்றே தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெர்சல் படம் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் இடம் பற்றி மாநில அரசு தான் முடிவு செய்யவேண்டும்.

மாநில அரசு பரிந்துரைத்தால் அதனை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story