ஆம்பூரில் திடீர் ஆய்வு: டெங்கு கொசுவை ஒழிக்க அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் கலெக்டர் பேட்டி
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து ஆம்பூரில் கலெக்டர் ராமன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது டெங்கு கொசுவை ஒழிக்க அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று கூறினார்.
ஆம்பூர்,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வும், கொசு ஒழிப்பு பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. அந்த பணிகளை கலெக்டர் ராமன் நேரில் சென்று ஆய்வு செய்தும், ஆலோசனைகளை வழங்கியும் வருகிறார்.
நேற்று காலை 6-30 மணிக்கு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கலெக்டர் ராமன் திடீரென வந்தார். அங்கு குழந்தைகள் வார்டு மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். மேலும் ஆஸ்பத்திரியின் வளாகத்தை சுற்றி பார்த்து குறைகளை சரிசெய்ய ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து கே.எம்.நகர், புதுமனை பகுதியில் நடைபெற்று வரும் கொசு ஒழிப்பு பணிகளை பார்வையிட அப்பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் கலெக்டர் சென்று வீடுகளில் கொசு இருக்கிறதா? என ஆய்வு செய்தார். மேலும் வீடுகளின் மாடிகளுக்கு சென்று அங்கும் தண்ணீர், குப்பை இருக்கிறதா என பார்வையிட்டார்.
இதையடுத்து கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி பணியாளர்களை அழைத்து அவர்களிடம் எவ்வாறு பணி செய்ய வேண்டும், கொசு புழுக்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என விளக்கி கூறினார்.
பின்னர் எம்.சி.ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு சரிவர குப்பை அகற்றாமல் இருந்ததும், கழிவுநீர் தேங்கி இருப்பதையும் பார்த்த அவர் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பவும், 2 நாட்களில் குறைகளை சரி செய்யவும் உத்தரவிட்டார்.
பின்னர் கலெக்டர் ராமன் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அக்பர் என்பவரது வீட்டிற்கு வெளியே குடிநீர் தொட்டி இருந்தது. அந்த தொட்டியில் டெங்கு உருவாக்கும் கொசுப்புழு இருந்தது. மேலும் அந்த தொட்டி திறந்த நிலையில் சுகாதாரமற்று இருந்தது. அதனால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சலை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவட்டம் முழுவதும் டெங்கு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கொசுக்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொசுவை ஒழிக்க அதிகாரிகள் நினைத்தால் மட்டும் முடியாது. வீட்டில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.
வேலூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு குறைவுதான். டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும் டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பற்றாக்குறை சரி செய்யப்படும். அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் தேவபார்த்தசாரதி, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் காமராஜ், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்மதி, தாசில்தார் மீராபென்காந்தி, நகராட்சி துப்புரவு அலுவலர் நெடுமாறன், துப்புரவு ஆய்வாளர்கள் சிவக்குமார், பிரணாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story