சாராய வியாபாரி மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது
சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி உத்தரவின்பேரில், சாராய வியாபாரி மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தலைவாசல்,
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ராமசேஷபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 27). சாராய வியாபாரியான இவர் கடந்த வாரம் ராமசேஷபுரம் ஓடை பகுதியில் 2 லாரி டியூப்களில் சாராயத்தை ஒரு மோட்டார் சைக்கிளில் வைத்து கடத்திச்சென்றார்.
அப்போது அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட ஆத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சவுத்ரி மற்றும் போலீசார், சங்கரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தார்கள்.
சங்கர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெளியே வந்தவர். இருந்தபோதும், அவர் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இளைஞர்களை சாராய விற்பனைக்கு பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக இவர் மீது ஆத்தூர் மதுவிலக்கு பிரிவு, தலைவாசல் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
எனவே, தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த சங்கரை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு) சுரேஷ்குமார் ஆகியோருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை அவர்கள், மாவட்ட கலெக்டர் ரோகிணிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கலெக்டர் ரோகிணி, சாராய வியாபாரி சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சங்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Tags :
Next Story