வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது


வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேர் கைது
x
தினத்தந்தி 21 Oct 2017 10:15 PM GMT (Updated: 2017-10-22T03:20:47+05:30)

பட்டுக்கோட்டையில் வீடு புகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து திருட்டுகள் நடைபெற்று வருவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் பட்டுக்கோட்டை நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாடியம்மன் கோவில் பின்புறம் மறைவான இடத்தில் சிலர் சந்தேகப்படும்படி உட்கார்ந்திருந்தனர். உடனே போலீசார் அங்கு இருந்த 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் அவர்கள் 5 பேரும் பட்டுக்கோட்டை நகரில் வீடுபுகுந்து கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து வீடு புகுந்து கொள்ளைடியக்க திட்டமிட்ட பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்த குகன் (வயது 26), ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்த தினேஷ்குமார் (25), ஆனைவிழுந்தான்குளத்தெருவை சேர்ந்த ஸ்ரீராம் (23), அவரது தம்பி ஸ்ரீகாந்த் (21), காசாங்குளம் கீழ்கரை தெருவை சேர்ந்த செந்தில்ரமணன் (21) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story