டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுத்த பள்ளிகொண்டா சுங்கச்சாவடிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கலெக்டர் நடத்திய ஆய்வில் டெங்கு கொசு கண்டறியப்பட்டதையடுத்து சுங்கச்சாவடிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அணைக்கட்டு,
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வேலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலமும் கொசு ஒழிப்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று காலை 7 மணிக்கு கலெக்டர் ராமன் வந்தார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியை ஆய்வு செய்தார்.
அப்போது சுங்கச்சாவடி சுற்றிலும் பழைய டயர் ஆயில் டப்பாக்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் சுகாதாரமின்றி குவிக்கப் பட்டிருந்தன. அவற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுப்புழு இருந்தது. இதையடுத்து பள்ளிகொண்டா சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு ரூ.1 லட்சம்அபராதம் விதித்து கலெக்டர் ராமன் உத்திரவிட்டார். தேவைப்பட்டால் சுங்கச்சாவடி நிர்வாகம் மீது வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இதையடுத்து அணைக்கட்டு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை பார்வையிட்டார். பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்த அவர் பஜார் தெருவில் உள்ள கடைகள் மழை நீர் வடிகால்களில் கொசுப்புழு உள்ளதா என பார்வையிட்டார். இதை தொடர்ந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவமனை வளாகத்தை சுற்றி பார்த்த அவர் அங்கு தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது அவருடன் அணைக்கட்டு தாசில்தார் மதிவாணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன், நலங்கிள்ளி, வருவாய் ஆய்வாளர் சத்யா கிராம நிர்வாக அலுவலர் சக்கரவர்த்தி உட்பட பலர் இருந்தனர்.

Related Tags :
Next Story