12,500 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் சுகாதாரக்கேடு கண்டறியப்பட்டதால் அதிகாரிகள் நடவடிக்கை
நெல்லை மாவட்டத்தில் சுகாதாரக்கேடு கண்டறியப்பட்ட 12,500 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டு உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் சுகாதாரக்கேடு கண்டறியப்பட்ட 12,500 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டு உள்ளார்.
கலெக்டர் ஆய்வுதிருநெல்வேலி மாநகாரட்சி 27–வது வார்டு பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.காலனி பகுதியில் சிறப்பு துப்புரவு பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று அதிகாலையில் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் வீடு, வீடாக சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தூய்மையாக இல்லாத வீடுகளுக்கு அபராதம் விதிக்கவும், அந்த வீட்டு உரிமையாளர்களிடம் விளக்கம் கடிதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
அபராதம் விதிக்க...இதைத்தொடர்ந்து என்.ஜி.ஓ. பி காலனி, டிராக்டர் தெரு, விக்டர் தெரு, டிரைவர் காலனி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி மூலம் நடைபெற்ற சிறப்பு துப்புரவு பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டிகள், டிரம்கள் உள்ளிட்டவைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டுகிறதா என ஆய்வு செய்தார். மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்களில் கொசு புழு உற்பதியாகிறதா என்பதையும், கொசு ஒழிப்பு புகை மருந்து அடிப்பதையும் ஆய்வு மேற்கொண்டார்.
கொசு புழு கண்டறியப்பட்ட கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வரும் வீட்டிற்கான கட்டடப் பணிகளை நிறுத்தி வைக்குமாறும் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும், குடிநீர் இணைப்பினை துண்டிக்கவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணநாயர், மாநகர நகர்நல அலுவலர் டாக்டர் பொற்செல்வன், உதவி ஆணையர் கவிதா, மாநகர உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, தாசில்தார் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:– அதிகாரிகளுக்கு உத்தரவுநெல்லை மாவட்டத்தில் டெங்குவை கட்டுப்படுத்துவதற்காக சுகாதரத்தை பேணவேண்டும், வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள், ஓர்க்ஷாப்கள், டயர்கடைகள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசு புழு உற்பத்தியாக கூடிய அளவிற்கு கிடக்கின்ற கட்டிடங்களை மாநகராட்சி, நகரசபை, நகரபஞ்சாயத்து, பஞ்சாயத்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதன் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த கட்டிடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
ரூ.2¾லட்சம் அபராதம்இந்த ஆய்வில் முறையாக பராமரிக்கப்படாத மற்றும் கொசு புழு கண்டறியப்பட்ட கட்டிடங்கள், வீடுகள், பள்ளிகூடங்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 500 கட்டிட உரிமையாளர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுவரை சுகாதாரக்கேடு கண்டறியப்பட்ட கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதுடன், 750 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கொசு புழு கண்டறியப்பட்ட புதிதாக கட்டப்படுகின்ற கட்டிடங்கள், கூடுதலாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கான கட்டடப் பணிகளை நிறுத்தி வைக்குமாறும் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும், குடிநீர் இணைப்பினை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளதாக, அவர் தெரிவித்தார்.