முதல்–மந்திரியுடன், மக்கள் தொடர்பு கொள்ள செல்போன் செயலி


முதல்–மந்திரியுடன், மக்கள் தொடர்பு கொள்ள செல்போன் செயலி
x
தினத்தந்தி 31 Oct 2017 10:00 PM GMT (Updated: 31 Oct 2017 8:21 PM GMT)

முதல்–மந்திரியுடன் மக்கள் தொடர்பு கொள்வதற்கான செல்போன் செயலியை சித்தராமையா தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

முதல்–மந்திரியுடன் மக்கள் தொடர்பு கொள்வதற்கான செல்போன் செயலி மற்றும் விவசாயிகளுக்கான செல்போன் செயலி தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் சித்தராமையா கலந்து கொண்டு, அந்த இரண்டு புதிய செயலிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:–

‘‘இது டிஜிட்டல் யுகம். ஒவ்வொருவரின் கையிலும் செல்போன் உள்ளது. முன்பு செல்போன், பேசுவதற்கு மட்டுமே பயன்பட்டு வந்தது. இப்போது அந்த நிலை மாறி அது பல்வேறு வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் செல்போன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த தகவலை மக்களுக்கு தெரியப்படுத்த இந்த செயலி தொடங்கப்பட்டு உள்ளது.

அதேபோல் இயற்கை பேரிடர் காலங்களில் விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை தகுதியான பயனாளிகளுக்கு வழங்க விவசாயிகளுக்கான செயலியை தொடங்கியுள்ளோம். மக்கள் தொடர்பு செயலி மூலம் அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கு தீர்வு காண முடியும்.’’

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story