பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கு: எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டு ஜெயில்


பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கு: எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 1 Nov 2017 3:45 AM IST (Updated: 1 Nov 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் எலக்ட்ரீசியனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சேலம்,

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே நீர்முள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி, லாரி டிரைவர். இவருடைய மனைவி சுமதி (வயது 24). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். அதே பகுதியை சேர்ந்தவர் பெரியதம்பியின் மகன் செல்வம் (29), எலக்ட்ரீசியன். இவர், கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி இரவு சுமதி வீட்டிற்கு சென்றார். அப்போது, அங்கு தனியாக இருந்த அவரை செல்வம் மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி, சத்தம் போட்டு கூச்சலிட்டார். இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும், உறவினர்களும் அங்கு திரண்டு வந்தனர். இதை அறிந்த செல்வம், நைசாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு வீட்டிற்குள் நடந்த சம்பவம் பற்றி சுமதி தனது உறவினர்களிடம் எடுத்துக்கூறி கதறி அழுதார்.

இது தொடர்பாக காரிப்பட்டி போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி செல்வம் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, வீடு புகுந்து சுமதியை மிரட்டி பலாத்காரம் செய்ய முயன்ற செல்வத்திற்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.22 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

Related Tags :
Next Story