மழைநீரை சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி தகவல்
மழைநீரை சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ‘ஏடிஸ்‘ கொசுக்கள் முறையாக மூடி வைக்காத நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது. எனவே, ஒவ்வொருவருக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த பணியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் வாரம் ஒருமுறை தங்கள் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று குணமடையும் வகையில் சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காய்ச்சலுக்கான காரணத்தை 40 வினாடிகளில் தெரிவிக்கக்கூடிய உயர்தர நவீன ரத்த அணுக்களின் அளவீட்டை கணக்கிடும் எந்திரங்கள் போதிய அளவில் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் ஜெயலலிதா அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், குடிமராமத்து பணி விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டமாகும். அந்த வகையில் தென்மேற்கு பருவமழை ஓரளவு பொழிந்து ஆங்காங்கே இருக்கின்ற ஏரி, குளம், ஓடைகளின் வழியாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திட குடிமராமத்து பணி திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. கடந்த 4 ஆண்டு காலம் கடுமையான வறட்சி நிலவிவந்த சூழ்நிலையில் குடிநீர் பிரச்சினை பெரும் சவாலாக இருந்தது. இதற்கு காரணம் 140 ஆண்டுகாலம் இல்லாத வறட்சியை நாம் சந்தித்தோம்.
ஆகவே, இந்த வறட்சியான காலகட்டத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் துணையோடு மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடும் சிறப்பாக கையாண்டதன் பலனாக மக்களுக்கு குடிநீர் பிரச்சினை இல்லாமல் பார்த்து கொள்ளப்பட்டது. அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை அரசு மேற்கொண்டது. அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முறையாக பயன்படுத்தி மக்களுக்கு குடிநீர் பிரச்சினை இல்லாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
தற்போது தொடங்கி உள்ள வடகிழக்கு பருவமழை அதிக அளவு பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்துத்துறையை சார்ந்த அலுவலர்கள் சிறந்த முறையில் பணியாற்றி பருவமழையை எதிர்கொள்ளும் விதத்தில் சேலம் மாவட்டம் மற்ற மாவட்டத்திற்கு முன்னோடி மாவட்டமாக விளங்க வேண்டுமென கேட்டுகொள்கிறேன்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை இன்றைக்கு பல்வேறு ஏரி, குளங்கள் இருந்த போதும் ஏற்காடு மலைப்பகுதி, ஓமலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியை சார்ந்த நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்தால்தான் விவசாய பணிகள் மேற்கொள்ள முடியும். பெய்கின்ற மழைநீரை சேமித்து நிலத்தடி நீரினை உயர்த்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Tags :
Next Story