தனியார் நிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது


தனியார் நிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2017 3:45 AM IST (Updated: 1 Nov 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

திருச்சி,

திருச்சி உய்யக்கொண்டான் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 33). இவர் கே.கே.நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டு அருகே வசிப்பவர் கார்த்திக்(28). இவர் நேற்று காலை மணிவண்ணன் வீட்டின் அருகே பழைய ஒயர்களை எரித்துக்கொண்டிருந்தார். அதன் புகை மணிவண்ணனின் வீட்டு சுவரில் படிந்தது. இதனால் அவர் கார்த்திக்கிடம் இங்கு ஏன் வைத்து ஒயர்களை எரிக்கிறாய் என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், மணிவண்ணனை தகாத வார்த்தையால் திட்டியதோடு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக மணிவண்ணன் அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story