கரும்புக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
கரும்புக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் நேற்று முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதன்படி தலைவராக சிவபாண்டியன், செயலாளராக மதிவாணன், பொருளாளராக லட்சுமிநாராயணன், துணைத்தலைவர்களாக ஜானகிராமன், தர்மசிவம், துணை செயலாளர்களாக கோபாலகிருஷ்ணன், கணேசன், முருகானந்தம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில், கரும்புக்கான நிலுவைத்தொகையை உடனே ஆலை நிர்வாகத்தினர் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், 2017–18–ம் ஆண்டிற்கான கரும்பு விலையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் லிங்காராமன், ராகவன், லோகையன், சீத்தாராமன், ஜெயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.