மழைநீருடன் கழிவுநீர் கலந்து செல்வதால் பொதுமக்கள் அவதி
மழைநீருடன் கழிவுநீர் கலந்து செல்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
பொன்னேரி,
பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் அடகியது. திருவேங்கிடாபுரம் கிராமம். இங்குள்ள ஒரு சில வீடுகளில் இருந்து வெளியேறுறம் கழிவுநீரை அருகே உள்ள நீர்நிலையில் குழாய்கள் மூலம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து தகவலறிந்த பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சுகாதார பணியாளர்கள் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்களில் ஒரு தரப்பினர் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்ற வேண்டும் எனவும் மற்றொரு தரப்பினர் திருவொற்றியூர் நெடுஞ்சாலை கல்வெட்டின் வழியாக தண்ணீரை வெளியேற்றி விட்டு இங்கு வாருங்கள் என்று தெரிவித்தனர். அதிகாரிகள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனு=ப்பி வைத்தனர். பழவேற்காட்டில் மீனவர்கள் நேற்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கசவநல்லாத்தூர் என்.எஸ்.சி போஸ் தெரு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் மழைநீர் தெருக்களில் தேங்கி நின்றது. மழைநீரில் கழிவுநீர் கலந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். அதனை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான சீத்தஞ்சேரி, பாலவாக்கம், தண்டலம், கொய்யத்தோப்பு கிராமங்களில் நேற்று பலத்த மழை பெய்தது.