கிராம நிர்வாக அதிகாரி போல கையெழுத்திட்டு மோசடி; 2 பேர் கைது 139 போலி முத்திரைகள் பறிமுதல்
சோமரசம்பேட்டையில் கிராம நிர்வாக அதிகாரி போல் கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்டவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோமரசம்பேட்டை,
சோமரசம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் உதவி பெற சோமரசம்பேட்டையை சேர்ந்த சதீஸ் குமார் என்பவர் சிட்டா அடங்கல் சான்றுகளை வயலூர் கிராம நிர்வாக அதிகாரியிடம் கையொப்பம் பெற்றதுபோல் விண்ணப்பித்து இருந்தார். வங்கியில் அந்த விண்ணப்பத்தின் உண்மை தன்மையை அறிய அதற்கான அதிகாரி விசாரணை மேற்கொண்டார். அப்போது சதீஸ்குமார் கொடுத்த சான்றிதழ்கள் போலியானவை என்பது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த வயலூர் கிராம நிர்வாக அதிகாரி சங்கர், சோமரசம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சதீஸ்குமாரை அழைத்து விசாரித்தபோது, கிராம நிர்வாக அதிகாரி போல் போலியான கையொப்பம் இட்ட விண்ணப்பத்தை வயலூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த சின்னையன் என்பவர் தயாரித்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சின்னையனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில், கிராம நிர்வாக அலுவலக முத்திரையை போலியாக தயாரித்ததையும், அதிகாரி போல் கையொப்பம் இட்டதையும் ஒப்புக்கொண்டார்.
2 பேர் கைது
மேலும் சின்னையன் இதுபோன்று வேறு நபர்களுக்கு போலியான சான்றிதழ்கள் ஏதேனும் தயாரித்து கொடுத்துள்ளாரா என்று போலீசார் துருவித்துருவி விசாரித்தனர். இதில் அவர் மேலும் பல துறைகளின் போலியான முத்திரை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சின்னையனிடம் இருந்து அரசின் பல்வேறு துறைகளின் போலியான 139 முத்திரைகள் கைப்பற்றப்பட்டன. மேலும் யார், யாருக்கு அவர் முறைகேடாக சான்றிதழ்களை தயாரித்து கொடுத்துள்ளார்?. இந்த மோசடியில் வேரு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலியான முத்திரைகள் தயாரித்தும், அதிகாரிகள் போல் கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்ட சின்னையன் மற்றும் சதீஸ்குமார் இருவரையும் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Related Tags :
Next Story