துறையூரில் ஆசிரியர் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

துறையூர்,
துறையூர் அண்ணா சிலை அருகே அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் துறையூர் உதவி தொடக்க கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோத போக்கை கண்டித்து, துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சேவியர்பால்ராஜ், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பிரசன்னாவெங்கடாசலம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் தியாகராஜன் ஆகியோர் பேசினார்கள். தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் சக்திவேல் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் நீலகண்டன், அந்தோணி, விஜயகுமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது உதவி தொடக்க கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோதப்போக்கினை கண்டித்தும், பழிவாங்கும் நடவடிக்கை, அதிகார துஷ்பிரயோகம், பெண் ஆசிரியர்களின் தன்மானத்தை களங்கப்படுத்தும் செயல்களை கண்டித்தும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் அனைத்து ஆசிரியர் சங்க வட்டார செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story