ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ‘யுனெஸ்கோ’ விருது ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ‘யுனெஸ்கோ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஸ்ரீரங்கம்,
பூலோக வைகுண்டம் என்ற சிறப்பு பெற்றதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், ஆன்மிகம், சுற்றுலா மற்றும் புராதன முக்கியத்துவம் கொண்ட சிறப்புடையதாகும். 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 54 சன்னதிகள் கொண்ட பிரமாண்டமான இக்கோவில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்தின் முக்கிய வீதிகளுடன் ஊரே கோவிலுக்குள் அடக்கம் என்ற சிறப்பும் இக்கோவிலுக்கு பொருந்தும்.
இதில் வழிபாட்டுக்குரிய சன்னதிகள் 36 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த பெரிய கோவிலில் முழு அளவில் திருப்பணிகள் செய்து கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இரண்டு கட்டமாக கும்பாபிஷேகம் நடந்தது.
யுனெஸ்கோ விருது
சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் வழிபாட்டில் உள்ள பழமையான இக்கோவிலில் நடந்த திருப்பணிகள் குறித்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு யுனெஸ்கோ அமைப்பு சார்பில் 9 வல்லுனர்கள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது. இக்குழு தனது ஆய்வறிக்கை முடிவு குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது. அதில் பழமை மாறாமல் திருப்பணிகள் நடத்தி, புராதன சிறப்பை பாதுகாத்தமைக்கு சிறப்பு விருது(யுனஸ்கோ) வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கோவிலின் இணை ஆணையர் ஜெயராமன் கூறுகையில், அரசு மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன் வழிகாட்டுதலோடு நடந்த இத்திருப்பணிகளுக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம் இது. தமிழகத்தில் உள்ள கோவில்களில் இந்த விருது பெறும் முதல் கோவில் இதுதான். அறிவிக்கப்பட்ட விருதை யுனெஸ்கோ அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் விரைவில் நேரில் வந்து வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.
கொண்டாட்டம்
‘யுனெஸ்கோ’ விருது அறிவிக்கப்பட்ட தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று மாலை கோவில் வாசலில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Related Tags :
Next Story