டெங்கு தடுப்பு நடவடிக்கை: மாங்காய் மண்டிக்கு ‘சீல்’ வைப்பு கலெக்டர் கதிரவன் நடவடிக்கை


டெங்கு தடுப்பு நடவடிக்கை: மாங்காய் மண்டிக்கு ‘சீல்’ வைப்பு கலெக்டர் கதிரவன் நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Nov 2017 4:30 AM IST (Updated: 2 Nov 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கலெக்டர் கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஒரு மாங்காய் மண்டியில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பதை கண்டுபிடித்து அந்த மண்டிக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகராட்சி சேலம் ரோடு, கிருஷ்ணன் கோவில் தெரு, ராசிவீதி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

குடிநீர் தொட்டிகளில் டெங்கு கொசுப்புழுக்கள் இல்லாமல் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், வீடுகளில் இருந்த தேங்காய் மட்டைகள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகள், காலி டப்பாக்கள் ஆகியவற்றை அகற்றும் பணிகளையும் பார்வையிட்டார்.

கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியில் இனிப்பு வகைகள் தயாரிக்கும் ஒரு தொழில் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு பிளாஸ்டிக் தம்ளர்கள், பிளாஸ்டிக் கவர்கள் உள்ளதை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

தொடர்ந்து அப்பகுதியில் இயங்கிவரும் தனியார் மாங்காய் மண்டியில் மேற்கூரைகளில் மழை நீர் தேங்கி இருந்ததை பார்வையிட்டார். அந்த பகுதியில் டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு ரூ.4 ஆயிரம் விதிக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தை ஆய்வு செய்த கலெக்டர் அங்குள்ள குடிநீர் தொட்டிகள் மற்றும் சுற்றுப்புறம் துாய்மையாக பராமரிக்காததை அடுத்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், ஒரு வீட்டு உரிமையாளருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மரு.பிரியாராஜ், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுசில்தாமஸ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம், தாசில்தார் கன்னியப்பன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story