டீக்கடை உரிமையாளரை வெட்டிக்கொல்ல முயற்சி போலீஸ் தேடிய 4 பேர் கைது
பட்டுக்கோட்டை அருகே டீக்கடை உரிமையாளரை வெட்டிக்கொலை செய்ய முயன்ற வழக்கில் போலீஸ் தேடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டுக்கோட்டை,
பட்டுக்கோட்டை தேரடி தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் மணிகண்டன்(வயது27). டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சாந்தாங்காடு கிராமத்தை சேர்ந்த அருண்சந்தர் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மதியம் மணிகண்டன் டீக்கடையில் இருந்த போது அருண்சந்தர் உள்பட 7 பேர் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்து மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மணிகண்டன் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அருண்சந்தர் உள்பட 7 பேரை தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கபிலன்(19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைது
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த 6 பேரில் பட்டுக்கோட்டை கண்டியன் தெருவை சேர்ந்த விக்னேஷ்(24), முருகையா தியேட்டர் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த மதன் (20), 17 வயது சிறுவன் ஒருவன், திருவாடானை பகுதியை சேர்ந்த முருகவேல்(18) ஆகிய 4 பேரை பட்டுக்கோட்டை தங்கவேல் நகர் நகராட்சி பள்ளி அருகே வைத்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story